Monday, November 24, 2008

வெளிப்படாதவை

அம்மா அடித்தும் எனது அழுகை .
எனது பள்ளிக்கூட காதல் .
விளையாட்டில் பட்ட காயம் .
சிறு வயதில் பிடித்த வைக்கோல் பீடி.
மறைத்த ஏறி குளியல் .
மறந்து போன வீட்டு படம் .
மழலையில் கொடுத்த ஆசை முத்தம் .
திருடிய அப்பா பணம் .
விடுப்பெடுக்க வந்த போலி வயிற்றுவலி .
ஊசிவைத்தியர் மீது கொண்ட கோபம் .
செலவிட நினைத்த உண்டியல் காசு .
கொடுக்க மறந்த காதல் கடிதம் .
நாளேட்டில் குறித்த காதல் சொல்லும் தினம் .
சொல்ல முடியாத இளம் காதல் கனவு .

4 comments:

thamizhparavai said...

தனா...
நன்றாக இருக்கிறது 'வெளிப்படாதவை'.இதன் சிறப்பு இது எல்லோருக்கும் பொது என்பதால்தான்.

தேவன் மாயம் said...

தங்கள் வருகைக்கு நன்றி.
மீண்டும் வருக.

காரூரன் said...

மலரும் நினைவுகள் போலும்...
களவும் கற்று மற என்பார்கள் அதனால் தானோ!

பூச்சிபாண்டி said...

நன்றி காரூரன் , தேவன்மயம்
\\களவும் கற்று மற என்பார்கள் அதனால் தானோ!\\
அதனாலும் இருக்கலாம்