Monday, November 24, 2008

வெளிப்படாதவை

அம்மா அடித்தும் எனது அழுகை .
எனது பள்ளிக்கூட காதல் .
விளையாட்டில் பட்ட காயம் .
சிறு வயதில் பிடித்த வைக்கோல் பீடி.
மறைத்த ஏறி குளியல் .
மறந்து போன வீட்டு படம் .
மழலையில் கொடுத்த ஆசை முத்தம் .
திருடிய அப்பா பணம் .
விடுப்பெடுக்க வந்த போலி வயிற்றுவலி .
ஊசிவைத்தியர் மீது கொண்ட கோபம் .
செலவிட நினைத்த உண்டியல் காசு .
கொடுக்க மறந்த காதல் கடிதம் .
நாளேட்டில் குறித்த காதல் சொல்லும் தினம் .
சொல்ல முடியாத இளம் காதல் கனவு .

ஏழை காதலி மனதினுள்

சுவடுகளை அழித்து செல்கிறேன் நானும் சுவடின்றி .

மேகமாக கரைக்கிறேன் .

திரை போன்று மறைக்கிறேன் .

உறங்கும் போதும் நினைக்கிறேன் .

பாமரன்

கவிதை எழுத தோன்ற வில்லை .
அலங்காரம் செய்ய ஆர்வம் இல்லை .
அங்காடிக்கு செல்ல அவசியம் இல்லை .
பலகாரம் சாப்பிட விருப்பம் இல்லை .
நான் பணக்கார வீட்டு மகனும் இல்லை .